
வயதாகிப் போனாலும்
உன் காலில் நீ நின்று
பிறர் தயவு ஏதுமின்றி
உன் வாழ்வு, அதை நகர்த்த
தினம் நீ சேர்த்து
பின் விற்கும் குப்பை
அது யாருடனும் போட்டியின்றி
இவ்வுலகில் மறுசுழற்சி மற்றும்
மறு பயன்பாட்டுக்கு வழிவகுத்து
சுற்றுப்புறத்தைச் சுத்தமாக்கி
பல நன்மைகள் செய்தாலும்
உன் வாழ்வு
அது மட்டும் மாறாமல்
அப்படியே இருந்திடுதே.