
இகிகாய் தத்துவம்
ஆரோக்கியமாக வாழ
நீண்ட நாட்கள் வாழ
பசித்தபிறகு
உணவைக் குறைத்து
ருசித்து உண்போம்
இரவு சீக்கிரம் படுத்துத்
தினம் அதிகாலை எழுவோம்
தினமும் நடந்து
பிறரை அரவணைத்து
நண்பர்களை அழைத்துப்
பேசி மகிழ்வோம்
இளவேனிற்காலம்
வெயில் காலம்
இலையுதிர் காலம்
குளிர்காலம்
எதுவாய் இருப்பினும்
ஆனந்தமாய் இருப்போம்
நம் வயதை மறந்து
நாம் வாழ ஒரு காரணம் உண்டுடென்று
நம் மனமும் உடலும்
பிறர் நலத்தை நினைத்து
அதன் வேலையைத் தொடர்ந்தால்
நூறு ஆண்டுகள் அதற்கும்
மேலே கண்டு
வாழ்வில் மகிழ்ச்சி கொண்டு
நீண்ட வாழ்வை ரசிக்கும் வாய்ப்பு
நமக்கு நிச்சயம் உண்டு