சிவலோகம் சென்று
சிவனை அங்குப் பார்த்துவிட்டு
அங்கிருந்து லண்டன் சென்று
எலிசபெத் மகாராணியுடன்
கைக்குலுக்கிவிட்டு
பின் அமெரிக்கா சென்று
அதிபர் டிரம்ப்பை கொஞ்சம்
அதட்டி விட்டு
திரும்பும்போது
அபு துபாயிலே
தல தோனி யோடு
ஒரு கப்பு தேநீர் அருந்திவிட்டு
அங்கிருந்து இந்தியா வந்து
பிரதமர் மோடியுடன்
சிறிது நேரம்
இந்தி மொழியில் பேசிவிட்டு
இதையெல்லாம் அரை நொடியில் நான் முடித்துவிட்டு
சென்னை வந்து என் வீட்டில் நான் அமர்ந்தபோது
ஒரு நொடிக்கு மூன்று லட்சம் கிலோமீட்டர் பயணித்தும்
என்னைப் பின் தொடர்ந்த
ஒளி அது இன்னும் வரவில்லை
ஒளியின் வேகம்
அதை உரக்கச் சொல்லிப் பெருமைப்பட்ட என் இயற்பியல் ஆசிரியரைப் பார்க்க வேண்டும்
என் மனோவேகம்
அதை வென்று விட்டதை
அவரிடம் நான் பலமுறை
சொல்ல வேண்டும்