
பறவை அது ஆற்றில் நிற்கிறது
நீர் ஓடுகிறது
அதில் அது தெரிகிறது
நாம் இவ்வுலகில் இருக்கிறேnம்
காலம் ஓடுகிறது
நம் வாழ்க்கை அதில் நகர்கிறது
அப்பறவை பறந்து விடக்கூடும்
நாம் இறந்து விடக்கூடும்
நீரோட்டம் அது தொடர்ந்து விடும்
காலமும் நில்லாமல் அது ஓடும்
அப்பறவையை அந்த ஆறும்
நம்மை இந்த உலகமும்
மறந்து விட்டு தொடர்ந்து ஓடும்
நீரைப் பருகி விடு
வாழ்வை வாழ்ந்து விடு