
சம்சாரத்துடன் சண்டை
மின்சாரத்துக்கும் உண்டு
மின்னும் அதன் இணைப்பும்
சில சமயம் தன்
உறவைத் துண்டிக்கும்
சமாதானத் தூதுவர்கள்
இவர்கள் மின்கம்பம் ஏறி
சமாதானம் பேசி
அவர்களை இணைப்பர்
அப்பேச்சுக்கிடையே
மின் விஷயம் அறியா
எவரேனும்
நடுவில் புகுந்தால்
சமாதானத் தூதுவர்கள்
நேரே எமலோகம் செல்வர்