
இக்கண்கள் என்னை எதிர்பார்த்து
அங்கு நான் வந்து
என்னைப் பார்த்தபோது
என் துயரம் அது போச்சு வெகுதூரம்
இறங்கிற்று விரைவாக என் மனப்பாரம்
என் மடிமீது அது தாவி
வந்து அமர்ந்தபோது
அதன் அன்பு நான் பெற்று
புது தெம்போடு நான்
தலை நிமிர்ந்தபோது
நான் உணர்ந்தேன்
நான் பெற்ற
அந்த நிபந்தனையற்ற அன்பு
எனக்கு ஒரு வரம்
அது தந்தது எனக்கு
ஒரு யானையின் பலம்