இவ்வுலகில்
பல இன்னல்
பல துயரம்
பசியாலும்
நோயாலும்
பலர் இறக்க
மதச் சண்டை
மொழிச் சண்டை
அது இருக்க
பெரும் ஊழல்
மாசு படிந்த சூழல்
அது ஜொலிக்க
இறைவா
பிறர் சொல்லி
உன் அன்பை
உன் பண்பை
உன் மாண்பை
நான் கேட்டு
நான் உணர்ந்த
ஓர் உண்மை
கூறிடவா
பல கொடுமை
கொண்டுள்ள
இவ்வுலகை
உன் அன்பை
உன் நற்பண்பை
நல் மாண்பை
நீ மறந்து
எப்படி நீ இவ்வுலகை
இவ்வாறு
படைத்திருப்பாய் ?
நிச்சயம் உன்னால்
அது முடியாது
என்பதனால்
மனிதன் அவன்
உன்னைப் படைத்து
பல கதைகள்
கட்டி விட்டான்.
நீ இருந்தால்
இது நடக்க
சாத்தியமில்லை
உன்னிருப்பு
அது எனக்கு
நிச்சயம் இல்லை