
மலை அருகே ஒரு ஆறு
அதன் நடுவே ஒரு வீடு
அதன் அருகே ஒரு மரம் இருக்க
வானத்தில் ஒரு நிலவு இருக்க
அந் நிலவொளியில்
நான் பார்த்து இருந்தேன்
அங்கு யார் வருவார்
என்று காத்திருந்தேன்
குளிர் காற்று
அது வந்து
பெரும் அமைதி
அது தந்து
என்னைத் தாலாட்ட
என்னை மறந்து
நான் உறங்கி
நான் முழித்தபோது
கண் திறந்தபோது
ஆதவன் வந்ததைக் கண்டேன்
மலை அங்கே
வீடு அங்கே
மரம் அங்கே
அது இருக்க
நிலவு எங்கேயென ?
ஆதவனை நான் கேட்டேன்.