
ஒன்றாக அது இருந்து
ஆதவன் சுடரொளிப் பட்டு
அது பிரிந்து
மேலே ஒரு வெள்ளை குவியல்
மேகமாய்
கீழே ஒரு வெள்ளை குவியல்
உப்பாய்
ஞானம் தேடி
உப்பிடத்தில் வந்தமர்ந்து
கடல் நீரை அது பார்த்து
ஓர் விளக்கம் அந்நாய்
அது கேட்க
கடல் நீர் கூறிற்று
நிலை மாறுவது தான் வாழ்க்கை
எந்நிலையானாலும் பிறர் வாழ
உதவிடுவாய்
கடைப்பிடி இவ்வுயர் நோக்கை.