
கருப்பு ஆற்றில்
ஒரு வெள்ளைப் படகு
மீனவன் இல்லை
விண்மீன்களும் இல்லை
ஏன் தனியே பயணம்?
என்று நான் அதைக் கேட்க
பதிலேதுமில்லை
தொடர்ந்தது அதன் பயணம்
ஆதவன் வரும்வரை
பிறகு தான் அறிந்தேன்
அது அமைதியைச் சுமந்து
நிதானமாய் சென்றது என்று
கருப்பு ஆற்றில்
ஒரு வெள்ளைப் படகு
மீனவன் இல்லை
விண்மீன்களும் இல்லை
ஏன் தனியே பயணம்?
என்று நான் அதைக் கேட்க
பதிலேதுமில்லை
தொடர்ந்தது அதன் பயணம்
ஆதவன் வரும்வரை
பிறகு தான் அறிந்தேன்
அது அமைதியைச் சுமந்து
நிதானமாய் சென்றது என்று