
மண் சண்டை
பாகம் பிரிக்கும்
மண்பானை
தாகம் தீர்க்கும்
நாம் சென்றபின்
பாகம் மேலும் பிரியும்
மண் பானையோ
தொடர்ந்து தாகம்
தீர்க்கும்
என் நான் செத்து
சாகாமல் அது இருக்கும் ஒரு ஆசை
அது மண்ணோடு நான் கலந்து
மண்பானை ஆக வேண்டும்
பிறர் தாகம் தணிக்க வேண்டும்
உன் குத்து
அது முகமது அலி
கூடக் குதூகலத்தோடு
வாங்கிக் கொள்வான்.