
வனம் அது அழிக்கப்படுவதைக் கண்டு
மான் அது சினம் கொண்டு
தன் நெற்றிக்கண்ணைத் திறந்து
மனிதர்களைச் சுட்டெரிக்க நினைத்தபோது
சிறு பறவை அது
மனிதர்கள்மேல்
அனுதாபம் கொண்டு
மான் நெற்றியில் தான் அமர்ந்து
நெற்றிக்கண்ணை அது மறைத்து
அவன் தவற்றை அவன் உணர்ந்து
அதைத் திருத்த
மேலும் ஒரு வாய்ப்பினை
பெற்றுத் தந்ததடி