சில கேள்விகள்

நான் யார்?
எனக்குத் தெரியவில்லை

எங்கிருந்து வந்தேன் ?
அதுவும் புரியவில்லை

எங்குச் செல்வேன் ?
அதிலும் தெளிவு இல்லை

என் பயணம் எவ்வளவு தூரம் ?
யாரும் சொல்லவில்லை

என் எண்ணங்கள் எப்படி என்னுள் ?
எண்ணிப் பார்த்தும் பலனில்லை

விதியா அல்லது மதியா ?
விடை தெரியவில்லை
அதுதான் கதியா?

கடவுளா அல்லது கட உன் உள்ளா ?

படகில் அமர்ந்து
மெல்ல நகர்ந்து
ஆற்றின் நடுவே
சென்று கேட்டேன்
என் கேள்விகளை

படகு நின்றது
அசையாமல் இருந்தது
பெரும் அமைதி நிலவியது

என் கேள்விகள் அனைத்தும்
ஆற்று நீரில்
மூழ்கிக் கரைந்தது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s