என் நிலைமை கண்டு
என் துயரம் பெரியது என்று
மனதிலே குழப்பம் கொண்டு
என்னிடமே நான் புலம்பிக்கொண்டு
சற்று வெளியே வந்து
இந்த உலகை
நான் கண்டபோது
பார்த்தேன்
என்னைவிடத் துயர் அதிகம் கொண்டு
வாழ்வோர் பலருண்டு.
பார்த்தேன்
நல்ல உடை, சோறு,மற்றும் தங்கும் வீடு எனக்கு இல்லையென்று சொல்லுவோர் பலருண்டு.
பார்த்தேன்
நோய் கொண்டு
மருந்து மாத்திரைகளின்றி
ரோட்டோரத்தில் பலருண்டு.
பார்த்தேன்
குடிக்கக் குளிக்க
நீர் இல்லாமல்
சிரமப்படும் பலர் உண்டு
பார்த்தேன்
மூச்சுவிட நேரமில்லா
வெறும் சோற்றுக்காக
வேர்த்து நிற்கும்
பல பேர்கள்
இங்கு உண்டு
பார்த்தேன்
தன் தாய் அவளை இழந்து விட்டுத்
தம் தாய் மொழியில் எழுதப் படிக்க
முடியாத பல பேர்கள்
இங்கு உண்டு
பார்த்தேன்
கனவில் மட்டும் மூன்று வேளை உண்டுவிட்டு
காலைப் பசியோடு எழுந்துவிட்டு
ஒரு பிடி உணவுக்காகத்
தொடர்ந்து ஓடும்
பலர் இங்கு உண்டு
வெளியே பார்த்துவிட்டு
என் உள்ளே நான் வந்தபோது
குழப்பமில்லை
கலக்கமில்லை
மனிதநேயம் மலர்ந்தது
என் சுயநலம் மறைந்தது
என் வாழ்க்கையின் குறிக்கோள்
என்னவென்று புரிந்தது
நான் கடவுள் ஆனேன்
சிரமப் படுவோருக்கு
தினம் உணவும்
தங்க நல் இடமும்
பிழைக்க ஒரு விழியும்
காணும் முயற்சி
தன்னில் இறங்கலானேன்
இயற்கை அன்னையை
வணங்கலானேன்.