
நீ பருந்தினம்
நீ கழுகு இனம்
அகண்ட நீண்ட இறக்கைகளும்
தசைகளையுடைய கால்களும்
உன் வலிமையை நான் அறிவேன்
நீ உயரப் பறந்து
வானில் வட்டமிட்டு
வெகுதொலைவிலிருந்தே
இரையைக் காணும்
உன் கண் பார்வை
மிகக் கூர்மை
என்பதையும் நான் அறிவேன்
நீ மேலிருந்து
ஊழல் கறை படிந்த
மனிதர்களைப் பார்த்துவிடு
பின் கீழிறங்கி
அவர்களைத் தூக்கி
சென்று விடு
அது உனக்கு இரையைத் தரும்
பூமியில் நல்லோருக்கு
மன நிறைவைத்தரும்