
அந்த மரத்தடி பிள்ளையார்
உனக்கு கடவுளாகத் தெரிகிறார்
எனக்கோ கற்சிற்பம் ஆகத் தெரிகிறது
நாம் ஒன்றைத்தான் பார்க்கிறோம்
அதன் புரிதலில் தான் வேறுபடுகிறோம்
ஏன் அது ?
இதற்கு விடை கண்டு
நாம் புரிந்து கொண்டால்
நம் பயணம் இனிதே தொடரும்
நம் வாழ்வில் மகிழ்ச்சி மலரும்