இதை கண்டுபிடித்தவனுக்கு
பதவி உயர்வு கொடுத்து
கடவுள் ஆக்குவேன்
ஏன்?
இதில்….
போர் உண்டு ரத்தம் இல்லை
அணு ஆயுதங்கள் இல்லை
ஆயுதப் பெருக்கமும் இல்லை
கருப்பன் வெள்ளையனை நகர்த்தலாம்
வெள்ளையன் கருப்பனை நகர்த்தலாம்
இருவருக்கும் சமவாய்ப்பு
இது அவர்கள் அறிவை வளர்த்து
தரத்தை உயர்த்தும்
வெற்றியோ? தோல்வியோ?
இறுதியில் ஒரு கைகுலுக்கலுடன்
இனிதே முடிந்துவிடும்