
பல மைல்கள் நான் நடந்து
காட்டுக்குள் நான் வந்து
அவளுக்காக பூக்கள் பல பறித்துக்கொண்டு
அங்கிருந்த படியேறி நான் சென்று
அவள் வருகைக்கு
மரத்தடியில் காத்து நின்றபோது
இயற்கை அதன் அழகில்
நான் என் மெய்மறந்து
அவள் நினைவு துறந்து
வேறொரு உலகில் மிதந்த போது
என்னவள் அங்கு வந்தாள்
ஆனால் என்னை காணோம்