என்னுடன் நீ இருந்தாய்
துயில் களைய கண்விழித்தேன்
கனவு கலைந்தது
கொசு கடித்து உன் கொலுசு ஒலி மறைந்தது
பூவை கண்ட கவிஞன்
நடந்துவந்த கவிஞன்
இந்தப் பூவைப் பார்த்து நின்றுவிட்டான் நிறம் சிகப்பு
ஆதவன் மறைய வாடியது பூ
தெரிந்தது அது பின்னிருந்த இலை
நிறம் பச்சை
கவிஞன் தொடர்ந்து நடக்கலானான்
அக்னி தேவன்
அக்னி தேவனுக்கு
பச்சிலை வைத்தியம்
கெத்து சொத்து
இவர் அமர்ந்திருக்கும் கெத்து
தெரியுது இது அவர் பாட்டன் வீட்டு சொத்து
ஒற்றைக்கால் தவம்
காட்டில் பல முனிவர் அருள் வேண்டி ஒற்றைக்காலில் தவம் இருக்க
ஒற்றைக்காலில் நீ நின்ற ஒரு நிமிடம்
அதைப் பார்த்த இயற்கை அன்னை
மழை தந்து அருளியதடி
விடைத்தாள்
பகலிலும் உன்னை கண்டிருக்கிறேன்
என் விடைத்தாள்களில்.
ஊரடங்கு நாட்கள்
வீட்டுக்குள் தொல்லை
வானமே எல்லை