பச்சை காடு
பச்சை காடு
நடுவே ஒரு ஆறு
மலை மேலிருந்து இறங்கி வரும் நீரு
பேரழகு, அமைதி உண்டு பாரு
ஒரு மனிதன் அங்கு சென்றால் போதும்
எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும்.
ஒரு முயல் இரண்டு நாய்
முயல் ஒன்றை நாய் இரண்டு துரத்த
மூன்றும் வெகுதூரம் ஓடி
தன் உயிர் காக்க
புதர் ஒன்றில் முயல் மறைந்தபோது
மிக முயன்று, செயலிழந்து
நின்றது அவ்விரு நாயும்
நம் வாழ்வில் சில பெருந்துயரம்
நம்மைத் துரத்தும் போது
இந்த முயல் போலே நாம் முயன்று
அதில் சிக்காமல்
அதைச் செயலிழக்கச் செய்து விடுவோம்
அத்துயரத்தை வென்றிடுவோம்