கவிதை – 1
அவர்கள் இழந்த தருணம்
அரசுப் பேருந்தில் மலை வழிப் பயணம்
பேருந்தில் உள்ளவருக்கோ
தூக்கத்தில் கவனம்
தூக்கம் அது தந்த கனவில்
சென்றது அவர்கள் மனம்
வேறொரு பயணம்
துக்கம் என்னவென்றால்
இழந்தார்கள் நான் மலை அழகியின் அழகை ரசித்த பல தருணம்
கவிதை -2
உன்னழகை நீ பார்த்தால்
மூக்குத்தி சரிசெய்து
உன்னழகை உன் கையில்
நீ பார்ப்பது ஏனோ ?
கண்ணாடியில் பார்த்தால்
உன் அழகைப்பார்த்து
உன் கண்ணே பட்டுவிடும் என்று தானே!
கவிதை – 3
தாய் சேய்
இவ்வுலக நாத்திகர்கள்
ஆத்திகர்கள் ஆன தருணம்
இவ்விரு தெய்வங்களை
ஒன்றோடு ஒன்று பார்த்தபொழுது