
நாவலர்,நாவலர் தான்
தமிழ் காத்த காவலர் தான்
சிறந்த தமிழ் கவி பல
ஏற்றியது பாரதிதாசன் தான்
அதைப் பட்டிதொட்டியெல்லாம்
கொண்டு சேர்த்தது நாவலர் தான்
பல தம்பி அண்ணாவுக்கு இருக்க
அவர் முதல் தம்பி நாவலர் தான்
தம்பி வா தலைமை ஏற்க வா என்று
அண்ணா சொன்னதும் நாவலரைத்தான்
வெண்தாடி வேந்தரே
குறையேதும் காண முடியாதபடி இருந்தவர்தான்
அது இளந்தாடி வேந்தராய்
அவரைப் பின்பற்றிய நாவலர் தான்
மேடையில் அவர் வாய் திறந்தால்
செந்தமிழ் ஊற்றெடுத்து
அருவியாய் வந்திடுமே
கேட்போர்க்கு அமுதம் தந்திடுமே
அவர் நாவலர் தான்
தமிழ் காத்த காவலர் தான்
குறளுக்கு உரை எழுதி
வள்ளுவனுக்குப் புகழ் சேர்த்து
பாரதிதாசன் வாழ்வுதனை
தன் எழுத்தால்
பலர் அறிய வழி வகுத்து
திராவிட இயக்க வரலாற்றை
செம்மன தொகுத்து
இதுவெல்லாம் தமிழ் உலகிற்கு
அவர் விட்டுச்சென்ற
அளவிடமுடியாத பெரும் சொத்து
நாவலர் நாவலர் தான்
தமிழ் காத்த காவலர் தான்
தமிழ் வந்து வெகுநாள் கழித்து
இவ்வுலகிற்கு அவர் வந்தார்
இருந்தும் தமிழ் உள்ளவரைப் பலர்நெஞ்சில் அவர் இருப்பார்
எங்கள் வாழ்வும்
எங்கள் வளமும்
மங்காத தமிழென்று
சங்கே முழங்கு
என்று அவர் தொடர்ந்து
உரைப்பார்