சிறுவயதில் என் கனவைக் கடல் கரை மண்ணில் நான் வரைய
அலை அலையாய் கடல் நீர் வந்து
அதை அழித்துக் கடல் திரும்ப
என் மனம் ஒடிந்து
நான் நடந்து
காலம் கடக்க
பின் நான் வளர்ந்து
கடற்கரை தன்னில்
கடலலை எட்டா
தூரத்தில் நான் அமர்ந்து
அக்கனவை இப்பொழுதும்
கடல் மண்ணில் நான் வரைய
அதுவும் பலர் கால் மிதி பட்டு அழிந்தொழிய
என் கனவு கலையாமல்
என்றென்றும்
என் மனதில் அது இருக்கும்
என் வாழ்நாளில் நிச்சயம்
ஓர் நாள் அது ஜெயிக்கும்
என்றுரைத்து என் கனவை
நான் வரைவேன்
அது மெய்ப்படும்
அந்நேரத்தில்
நான் ஜெயிப்பேன்