#ஊரடங்கு

பூக்கள் மலர்ந்து இருக்க
கடவுளும் கேட்பதில்லை
மனிதனும் பறிப்பதில்லை
வண்டுகளும் தீண்டுவதில்லை

நான்

நான் என்னுடைய நானா ?
அல்லது உன்னுடைய நானா?
என்னுள் உன்னைக் கொண்டு
என்னை தினம் தேடும் நான்

நிலவு தெரிந்தது

நிலவு தெரிந்தது
என் ஜன்னல் திறக்க
குளிர் காற்று வந்தது
அது எனக்கு இனிமை தந்தது

அதுபோல்
என் வாழ்வின் இலக்கு தெரியுது
என் மனதை திறக்கச் சொல்லுது

இந்தப் பிரபஞ்ச சக்தி என்னுள்ளே வந்திட
இலக்கை வென்று எனக்கு வெற்றி தந்திட

நான் வியக்கிறேன்

கவனமான நடை
தலையிலே எடை
மனதிலே சுமை
இத்துடன் ஆடு நான்கு
மாடு இரண்டு
உன்னுடன் நீ கூட்டிப்போக

ஒரு பொழுதில் பலபணிகள் அது இருக்க
நீ சலனமின்றி
சேலையை தூக்கி இடையில் சொருகி
அமைதியாக நடந்த படி அதை முடிக்க

உன் திறமை  உன் பொறுமை
அதைக்கண்டு நான் வியக்கிறேன்.

பார்வை போதும்

பாவையின் பார்வை ஒன்று எனக்கு போதும்

எல்லையில் சீனர்களை எதிர்த்து நின்று கொன்றுவிட

கரோனாவை பயமின்றி எதிர்கொள்ள

திரும்ப வந்து அவளைப் பார்த்து பார்த்து பூரிக்க