கரோனாவுக்குப் பயந்து ஊர் வந்தேன்
பட்டணத்து வேலையை நான் துறந்தேன்
என் வருகையால் என் பாட்டன் மகிழ்வடைந்தான்
நல்லதொரு வேலையை எனக்கு அளித்தான்
அசைகின்ற இச்சொத்துக்களை மேய்க்கச் சொன்னான்
ஒரு கூட்டம் உன் கீழே – நீ மேலாளர் என்றான்
அந்தப் புது உயர்வு எனக்கு அளித்தது உற்சாகம்
காட்டினேன் என் வேலையில் ஒரு புது வேகம்
என் சொல்லுக்குக் கட்டுப்படும் ஒரு கூட்டம் அதனாலே என் வேலையில்
வெகுதிருப்த்தி ஆனந்தம்
இந்த அசைகின்ற சொத்துக்களை மேய்ப்பது என் பொறுப்பு
இதனாலே இப்பொழுது பல அசையாத சொத்துக்கள் எனக்கிருக்கு
இந்தப் புதுவாழ்வைத் தந்ததனை நான் மறப்பேனா
அதனாலே என் செல்ல ஆட்டுக்குட்டிக்குப் பெயரிட்டேன் கரோனா