
பூமி நீர் ஆவியாய் மாறி
ஆகாய மண்டலத்தில்
இடை நிறுத்தப்பட்ட
அற்புதம் மேகங்கள்
மேகங்கள்மேல் எனக்கு மோகம் உண்டு
அதனிடமிருந்து கீீீழுள்ள மூன்றையும்
நான் வேண்டுவதுண்டு
தூய்மை வேண்டும்
அகத்திலும் புறத்திலும்
வெண் மேகங்களைப் போல
நான் பயன்பட வேண்டும்
பிறர் வாழ்வு செழிக்க
மழை தரும் மேகங்களைப் போல
நான் உணர வேண்டும்
வாழ்வில் இன்ப துன்பங்கள் அனைத்தும் கடந்த செல்லும் மேகங்களைப் போல
என்று…..
நன்று.