நான் பெற்ற கஷ்டங்கள், அவை
உன்னைத் தீண்டவே விடமாட்டேன்.
நான் அறியா கல்வி தன்னை உனக்குச் சிறப்பாகத் தந்திடுவேன்.
என் கைப்பிடித்து நீ தினம் தினம் உன் பள்ளிக்குச் செல்கையிலே
இவ்வாழ்வு எனக் கொடுத்த சில பாடங்களை நல்கதையாய்
உனக்குச் சொல்லிவிடுவேன்.
ஆங்கிலத்தில் சில சொற்களை நீ சொல்ல
எலிசபெத் ராணியாய் உன்னை நான் பார்த்தேன்
உன் குரலில் ஒரு திருக்குறளை நான் கேட்டு
வள்ளுவனை விட உயர்வாய் உன்னைப் பார்த்தேன்
நீ படித்துயர்ந்து உன் வாழ்வில்
சிறந்து விடு
சுதந்திரமாய் உன் வாழ்வில்
பறந்துவிடு
அது போதும்.
அதை ஒரு நொடி பார்த்து மகிழ்ந்துணர்ந்து என் உயிர் போகும்.