
வாழ்வைத் துறந்து
தனியாகப் பிரிந்து
மேலே பறந்து
பல ஊர்கள் திரிந்து
சில தடைகளைத் தகர்த்து
தினந்தினம் கற்று
அனுபவத்தைப் பெற்று
அறியாமையைத் தகர்த்து
ஒரு தெளிவைப் பெற்று
எல்லாம் போதுமேன்று
சற்றே அமர்ந்தபோது
கேட்டான் ஒருவன் ஒரு கேள்வி
வாழ்வின் பொருள் அது யாது ?
உடனே சொன்னேன் பதிலது இதுதான்
தேடிப்பார்த்தேன் பொருள்
ஏதும் இல்லை
பின் அனுபவத்தில் உணர்ந்தேன்
பொருள் ஒன்று உண்டு
அது நானே கொடுப்பது.