படிப்பதற்குப் பணம் கட்டி
வகுப்புக்குச் செல்லாமல்
கல்லூரி மதில் சுவரில்
தினம் தினம் நாம் அமர்ந்து
வெறும் கதைகள் பல பேசி
அக்காலத்தை வீண் அடித்தோம்
கல்லூரி நாம் முடித்து
இரு ஐந்தாண்டு உருண்டோடி
இப்பொழுது நான் பார்த்தால்
நீ மணம் முடித்துத் தாயாகி
செல்வ வளத்தோடு வாழ்கின்றாய்
வெளிநாட்டில்
நானோ உள்நாட்டில்
படிப்பதனை முடிக்காமல்
வேலை எதுவும் கிடைக்காமல்
அற்புதங்கள் நிகழும் என அற்பமாய் இருக்கின்றேன்.