
தினம் தினம்
காகம் ஒன்று பறந்து வந்து
வீட்டின் முன் அது அமர்ந்து
உரிமையோடு குரலெழுப்பி
உணவுதனை பெற்றுப் போகும்
என்ன பந்தம் தெரியவில்லை
முன் சொந்தமா ? புரியவில்லை
தெரிய வேண்டாம் புரிய வேண்டாம்
தினம் வந்து போகும் அந்த அன்பு போதும்
அதன் பசிக்கு உணவிட்ட திருப்தி போதும்.