புத்தகப் பிரியன்

அவன் கடவுளைக் கண்டான்.

அவரைப்பார்த்து நிதானமாகக் கேட்டான், ” நீங்கள் அனேகம் பேர் இவ்வுலகில் இருந்தும் ஏன் இத்தனை துன்பங்கள், எத்தனை கஷ்டங்கள்?” என்று.

கடவுள் சற்று நேரம் மௌனமாக இருந்தார்

பிறகு அவர் ஒரு கேள்வியை எழுப்பினார். ” இவ்வுலகில் எண்ணிலடங்கா துன்பம் மற்றும் கஷ்டங்கள் இருந்தபோதிலும் எவ்வாறு மனிதன் அதை எல்லாம் கடந்து வாழ்கிறான்?”

கடவுள்மேல் உள்ள நம்பிக்கையால் அது சாத்தியமாகிறது என்றான் அவன்.

நம்பிக்கையா ? அல்லது கடவுள்மேல் நம்பிக்கையா ? என்று கேட்டார் கடவுள்

அவன் ஆழ்ந்து சிந்திக்கத் தொடங்கினான்…..

தங்கராஜ் அப்புத்தகத்தைப் படிப்பதை நிறுத்திவிட்டு அவனும் கேள்விக்கான பதிலைப் பற்றிச் சிந்திக்கலானான்.

இதனால் தான் அவனுக்குப் புத்தகம் படிப்பது மிகவும் பிடிக்கும். அது அவனைச் சிந்திக்க வைக்கும். எழுத்தாளர்களின்  அனுபவங்களில் இருந்தும் அதில் வரும் சம்பவங்களில் இருந்தும் அவனுக்கு நிறைய  படிப்பினையும் தெளிவும் கிடைக்கும்.

இரவு வெகுநேரம் ஆகியும் தங்கராஜ்
அந்தக் கேள்விக்கான பதிலைச் சிந்தித்துக் கொண்டிருக்க அவனுக்குத் தூக்கம் வந்தது அவன் அப்படியே தூங்கிவிட்டான்.

அந்தக் கேள்விக்கு விடை கிடைக்குமா அவனுக்கு? அது தெரியாது.

ஆனால் அந்த புத்தகத்தைப் படிப்பதற்கு முன்பு  இருந்ததைவிட படித்துச் சிந்திக்கத் தொடங்கியபின் அவன் மனம் விரிவடையும், பக்குவப்படும், இனி எதிர்கொள்ளும் சவால்களைச் சமாளிக்க அவனை தயார்ப்படுத்தும்- இது நிச்சயம்.

அவன் நாளை வேறொரு புத்தகம் படிப்பான் வேறு சிந்தனையில் மூழ்கு வான்- இதுவும் நிச்சயம்.

Nano Story : Virus

Nano Story : Virus
Painting.     :  Mrs. Kuppulakshmi.

They belonged to different religious faiths and were in love. Often, they met in a place that was not accessible to many in that village.

That day violating the social distancing norm she asked him ” What do you think about Coronavirus ?”

He said, Coronavirus would eventually go after a while and it does not bother me much,but my worry is about the Communal virus plague which doesn’t show any signs of exit since long.

End.

Nano Story : The Secret

Nano Story : The Secret
Painting      : Mr.S Ayyarappan

In the middle of the sea he was all alone, completely isolated from the main land. He still has to go a long way to reach his destination.

From his boat’s deck he saw the sea — it was water and water everywhere.


He said to himself
I am all alone and surrounded by water –It frightened him.

He said to himself
Sea is very rough at times, it is dangerous — It gave him stress.

He said to himself
It is the nature of the sea to be rough at times, but it bound to change after a while — It gave him peace.

He said to himself
God is with me. I am not alone — It gave him hope.

He said to himself
My destination is just another 5K nautical miles away — It gave him the required clarity.

He said to himself
I am surrounded by water, yet I am on top of it — It empowered him.

He said to himself
I have come all alone so far, and the same way I will reach my destination — It gave him confidence.

And finally, he discovered that the Secret lies on what he tells himself.

End.

Ms. Aasha IAS

The whole country was locked down and fighting against a deadly pandemic. One Specific  district administration in the western part of the country was in the news for the care it took for its migrant workers who returned home from the other parts of the country, which had shut the doors for them.

The district administration received all its migrant workers as they returned , accommodated them in the public schools, provided them good food , water and medical care. It kept them in isolation for two weeks before sending them to their homes. And when they left, they were given a bag full of dry rations enough for next two months, Rs 1000 in cash and on top of it an assurance to get their lost job back when normalcy is restored.

Leading such measures from the front was the district collector Ms. Aasha IAS. Very hardworking , sincere and a brave young lady.

An old migrant worker on completing his isolation period and before returning home wanted to talk to the collector and thank her. He pestered the authorities and finally got him connected to Ms Aasha over the phone.

He spoke –“ You are an angel, good that you had the courage to stop your marriage then and continue your studies. Today because of you our people in this district are taken care well. Though I am older  , I salute you to show my respect . I wish I had a daughter like you .Very sorry that your father is not alive today to see all this, he would have been very happy as I am.  You kept your word. God blesses you.” The phone call ended.

Aasha went back sixteen years down her memory lane

Her father Abanindra was also a migrant worker and  after one such similar pandemic resulting in nationwide lock down, he walked three hundred kilometres all the way back to reach their home.  The administration’s support then was not to the level as it is now . Abanindra feared that he wouldn’t be able to get a job again and end up spending all his little savings to take care of his family’s needs during the lock down or may be for a little time after that. He left home and family to work elsewhere only to save money for his daughter’s marriage. Securing a future for her daughter was the single most important thing in his life.

He thought over it for few days and  decided to arrange his daughter Aasha’s marriage immediately though she was still a minor.  He secretly worked for it. Aasha somehow came to know about his fathers plan and reached out an officer in the district administration over the phone and sought his help . District Administration came to her help before the groom could arrive and rescued Aasha from that marriage.

When questioned, Abanindra replied “ It is only the fear that I will not be able to earn money again and all my savings would be spent during the crisis time, I took this decision keeping in mind my daughter’s well-being. I thought if she is married , the groom will take care of her. And I wanted to do it before my savings erode .”

Aasha with  tears in her eyes was moved by her father’s love. She requested her father to spend his savings on her education and in return promised to study well  , get into  government’s administrative job and  ensure no other father and/or daughter will go through the same situation in this district again.

And now she was happy for keeping up that promise.

Nano Story : God is Love


Painting Credit : Mr.Pankaj Agarwal

The only source of water for that village was at the hilltop. Being from that village, there they met every day to collect water. They were in love.

Once when they met, with the water flowing from the tap they forgot the world and kept talking, time went by and nobody knows how long.

Thereafter, the villagers never had to go to the hilltop to fetch water. The water that overflowed,turned into a river flowing through the village.

Villagers thanked God for the river, and we know that God is Love.

End.

பா ரா கம்ப்யூட்டிங்

பணம் மனித வாழ்வின் பல்வேறு கண்டுபிடிப்புகளில் ஒன்றாகத் தான் முதலில் இருந்தது. ஆனால் காலப்போக்கில் அது பல பரிமாணங்களை எடுத்து அதுதான் வாழ்க்கை என்றானது.

அதை முயன்று அளவுக்கு ஈட்டுவதே வாழ்வின் முக்கிய குறிக்கோள் என்று ஆனது.

நாம் இருக்கும் உலகம் பணத்தால் ஆளப்படுகிறது.பெரும்பாலோனோர் பணத்திற்காக ஏங்குகிறார்கள். பணத்தினால் எதையும் வாங்க முடியும் என்ற நம்பிக்கையுடன் இந்த உலகத்தையே ஆள முயல்கிறார்கள் ஆதிக்கம் செலுத்த நினைக்கிறார்கள்.

அத்தகைய உலகில் இரண்டு கம்ப்யூட்டர்  இன்ஜினியர்கள் எங்கோ பிறந்து வளர்ந்து அவ்விருவரும் சென்னையில் ஒரே கல்லூரியில் படிக்கும் வாய்ப்பைப் பெற்றனர்.

மிக நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள். பல விஷயங்களைப் பற்றி நிறையப் பேசினார்கள், சிரித்தார்கள், அந்த ஊரை முழுவதுமாய் சேர்ந்தே சுற்றினார்கள்.

‘இவன் துணியை அவன் போட அவன் துணியை இவன் போட, இருவரும் ஒரே பிரஷ்ல் பல் துவக்க என்று காலம் நகர்ந்து.

ஒரு வழியாக இருவரும் நல்ல மதிப்பெண்களுடன்  இன்ஜினியரிங்  பட்டத்தைப் பெற்றார்கள்.

ஒருவன் ராமச்சந்திரன் இன்னொருவன் பார்த்திபன்.அவர்கள் நட்பைப் பார்த்து அந்த ஊரே வியந்தது.

படிப்பு முடித்தவுடனே அவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு தொழில் தொடங்கினர். அது ஒரு கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் கம்பெனி. அதற்கு அமல் கம்ப்யூட்டிங் என்று பெயர் சூட்டினார்கள்.

அது என்ன அமல் என்று பலர் கேட்க அமல் என்றால் செழிப்பு என்று ஒரு பொருள் உண்டு விளக்கினார்கள்.

அந்தப் பெயருக்கு ஏற்ப அவர்களுடைய கம்பெனி இரண்டு வருடங்களில் மிக நன்றாக வளர்ந்து பிற மாநிலங்களில் விரிவுபடுத்தும் நிலைக்குச் சென்றது.

கம்பெனி பெரிதாகப் பெரிதாக இருவரும் தங்களுக்குள் அதன் நிர்வாகப் பொறுப்பினை பிரித்துக் கொண்டனர்.
ராமச்சந்திரன் டெக்னிக்கல்  விஷயங்களைக் கவனிக்க  பார்த்திபன் நிதி சம்பந்தப்பட்ட பொறுப்புகளை ஏற்றுக் கொண்டான்.

பணம் சேர சேர ராமச்சந்திரனின் வாழ்வில் பல மாற்றங்கள் தெரிந்தன. பெரிய இடத்துத் தொடர்புகள் புதிய நட்புகள் அவன் பாதையைச் சற்று மாற்றின. செல்லும் வழி முக்கியமல்ல சேர்க்கும் பணம் தான் முக்கியம் என்று செல்ல ஆரம்பித்தான். தொழிலில் கவனம் குறைந்தது. குறுக்கு வழியில் எப்படிப் பணம் சம்பாதிப்பது என்று சிந்திக்கலானான்.

பார்த்திபன் பலமுறை நல்லது எது என்று எடுத்துச் சொல்லியும் அதைக் காதில் அவன் வாங்கிக் கொள்ளவில்லை. மேலும் பார்த்திபன் அந்தக் கம்பெனியின் லாபத்தில் 10% யைப்பொதுநல சேவைக்காகச் செலவிடுவது ராமச்சந்திரனுக்கு அறவே பிடிக்கவில்லை.

அவர்கள் நட்பு விரிசல் விடத் தொடங்கியது.இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
பார்த்திபன் அந்தப் பிசினஸ்  பார்ட்னர்ஷிப்பிலிருந்து விலகுவது என்று முடிவு செய்தான். அதை ராமச்சந்திரனிடம் தெரிவிக்க பார்த்திபன் பங்குகளை அவனே வாங்கிக் கொள்வதாகக் கூறி ஒப்பந்தம் தயார் செய்து பார்த்திபன் பங்கிற்கான பணத்தையும் கொடுத்து விட்டான். மனஸ்தாபங்கள் இருந்தாலும் இருவரும் சுமுகமாகவே பிரிந்தனர்.

சற்று வருத்தம் அடைந்த பார்த்திபன் நிலைமையைச் சமாளித்துக் கொண்டு அந்த நாட்டை விட்டு அமெரிக்கா சென்று தன் படிப்பைத் தொடர்ந்து அங்கேயே பிறகு குடியுரிமை பெற்று பா கம்ப்யூட்டிங் என்ற ஒரு கம்பெனியைத் தொடங்கி அதில் வெற்றியும் பெற்றான்.

பிறகு இருவரும் ஒருவரையொருவர் தொடர்பு கொள்ளவேவில்லை அவ்வாறே 30 வருடங்கள் ஓடிவிட்டன.

முப்பது வருடங்களுக்குப் பிறகு பார்த்திபன் அவன் மகன் ஆதன் திருமண விஷயமாகச் சென்னை வர நேர்ந்தது.

ஆதன் தன்னுடன் அமெரிக்காவில் கல்லூரியில் படிக்கும் அழிசி என்ற பெண்ணைக் காதலிப்பதாகவும் அந்தப் பெண்ணின் பெற்றோர் சென்னையில் இருப்பதாகவும் அவர்களின் சம்மதம் பெறப் பார்த்திபன் சென்னை வர வேண்டும் என்று கூறியதால் இந்தப் பயணம்.

பார்த்திபன் அவன் மகன் ஆதனுடன் அழிசின் பெற்றோரைப் பார்க்க அவள் வீட்டுக்குச் சென்றபோது அவனுக்கு அந்த ஆச்சரியம் காத்திருந்தது.

அழிசியின் தந்தை வேறு யாருமல்ல அவன் கல்லூரி நண்பன் ராமச்சந்திரன் தான். குடிபோதையால் உடல் நோயுற்றுப் படுத்த படுக்கையாகத் தன் வாழ்வின் இறுதி நாட்களை எதிர் நோக்கிக்கொண்டிருந்தான்.

இருவரும் சந்தித்தனர் ராமச்சந்திரன் கூனிக்குறுகி வெட்கம் அடைந்தான். பிறகு இருவரும் மனம் விட்டுப் பல மணி நேரம் பேசினார்கள். ராமச்சந்திரனின் தொழில் நஷ்டத்திலும், கவனிக்க ஆள் அற்று கஷ்டத்திலும் இருப்பதை அறிந்தான். தானே அதை வாங்கிக் கொள்வதாகவும் அதை மேலும் கவனித்துக் கொள்வதாகவும் பார்த்திபன் ராமச்சந்திரனுக்கு வாக்களித்தான் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

ராமச்சந்திரனின் கம்பெனி பார்த்திபனிடம் வந்து சேர்ந்தது. அதற்கு ஈடாக ராமச்சந்திரனுக்கு மார்க்கெட் விலையைவிட அதிகமாக ஒரு கணிசமான தொகை கொடுக்கப்பட்டது.

அந்தக் கம்பெனிக்கு அவர்களின் நட்பைக் குறிக்கும் வகையில் பாரா (பார்த்திபன் ராமச்சந்திரன்) கம்ப்யூட்டிங் என்று பெயர் மாற்றப்பட்டது.

அவன் மகனின் திருமணம் நல்லபடியாக முடிந்து பாரா கம்ப்யூட்டிங் கம்பெனியைத் தன் திருமண பரிசாகத் தன் மகன் மற்றும் மருமகளிடம் கொடுத்துவிட்டு அவன் அமெரிக்கா திரும்பத் தயாரானான்.

தான் செல்வதற்கு முன் அவன் பா கம்ப்யூட்டிங் கம்பெனியின் சார்பில் பாரதப் பிரதமர் கரோனா நிவாரண நிதிக்கு 700 கோடி தருவதாக அறிவித்து அதையும் செய்து முடித்தான்.

ராமச்சந்திரன் மற்றும் பார்த்திபன் இருவரும் சம்பாதித்தார்கள் எவ்வாறு செலவழித்தார்கள் என்பதைப் பொறுத்தே அவர்கள்  வாழ்க்கைதன்னை வடிவமைத்துக் கொண்டது.

விமான நிலையத்தில் அந்த நிருபர் உங்கள் வெற்றியின் ரகசியம் என்னவென்று கேட்க

பார்த்திபன் 

பணம் என்னிடம் முடங்கிக் கிடப்பதை நான் அனுமதிப்பதில்லை.அதை என் மூலமாகப் தேவைப்படும் பிறர்க்குத் தொடர்ந்து பயணிக்கச் செய்கிறேன்.ஆதலால் அந்த பணம் இயற்கையாகவே என்னை நோக்கி ஈர்க்கப்படுகிறது  என்று கூறி விடைப் பெற்றான்

Tale of Two ABAYAN’s

Tale of two ABAYANs

Prelude:

Date: 10th April 2020

This is a story about some moments in the life of two men who live at two different places in this vast country India and share a common name “ABAYAN”

The Story:

The First Abayan

He lives in a southern state of India. A doctor by profession aged 50. Though most of his state’s residents were confined to their homes, the state was still at the risk of entering the stage III of Pandemic COVID -19 outbreak. As a member of the task force set by the Local government to advice on the COVID -19 containment measures he was busy brainstorming with the other members of that task force on whether the government should go for extension of full or Partial lockdown. His face was tense as that of others and something is always bothering at the back of his mind.

The Second Abayan

Aged 90, he lives in a very remote place of north eastern part of India, not known to many in India itself (forget about the rest of the world.), too far from the medical attention, have never seen any of Edison’s invention and with no public transport but it is home for some 10,000-odd people. They were yet to discover money. There they all lived as a family where everyone goes to the nearby forest in the day time and gather some food, comeback and eat together. They ate only when they were hungry That was their daily routine. They lived very close to nature with smiles always in their faces and their heart full of love. Completing his four hours routine of gathering food that morning, Abayan was relaxing with a group of his community men.

End

COVID -19 knew about First Abayan and it will never know about Second Abayan. It also failed as it’s predecessors MERS, SARS, Ebola, Swine flu etc. to reach him.

மனிதரில் புனிதர்

நேரம் இரவு 10.30

அந்த ரோடு வெறிச்சோடி இருந்தது இன்றும் சுமதி தன் வேலையை முடித்து வீடு திரும்ப வழக்கத்துக்கு மாறாகத் தாமதமானது.

அரசு மருத்துவமனையில் செவிலியர் வேலை. கரோனா பாதிப்பினால் கடந்த இரு வாரங்களாக அவளுக்கு வேலை சற்று கூடுதலாக இருந்தது. பேருந்தை விட்டு இறங்கி தன் வீட்டுக்கு நடக்கத் தொடங்கினாள். ஊரடங்கு சட்டத்தினால் அந்த ரோட்டில் ஆள் நடமாட்டம் மற்றும் வாகனப் போக்குவரத்து மிகக் குறைந்தே இருந்தது. தெருவிளக்குகள் எரிந்தாலும் மங்கலாக இருந்ததால் போதிய வெளிச்சம் இல்லை. பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை மற்ற நாட்களிலும் அந்த இடம் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த மாதிரி தான் இருக்கும் ஆகையால் அந்த ரோட்டில் திருட்டு கொலை சம்பவங்கள் சற்று தாராளமாகவே தான் இருந்தது.

இன்றும் அவளை அவன் பின்தொடர்வது தெரிந்தது. அவள் நடந்தவாறே மெதுவாகத் திரும்பிப் பார்த்தாள். தடித்த மீசையுடன் அதே இளவயது வாலிபன். இவள் பார்த்தவுடன் அவன் பார்வையை வேறு பக்கமாகத் திருப்பிக் கொண்டான்.

கடந்த ஒரு வாரமாக அவள் வீடு திரும்பும்போது அவன் அவளைத் தொடர்வது வழக்கமாய் ஆனது. அவளுக்குச் சற்று பயம் இருந்தாலும் வேலை தந்த களைப்பினால் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை மேலும் பல நோயாளிகளின் மரணங்களை அருகிலிருந்து பார்த்திருப்பதால் அந்தப் பயத்தையும் மீறி அவளுக்குள் ஒரு தைரியம் இருந்தது.

ஆனால் இன்று பல சிந்தனைகள் அவள் மனதுக்குள், யார் இவன்? எதற்காக  பின் தொடர்கிறான்? இவனை இதற்கு முன் எங்கும் பார்த்த ஞாபகம் இல்லையே…. என்று.

தன் நடைவேகத்தை சற்று கூட்டினாள்
அவனும் அரசு சொல்லிய சோசியல் டிஸ்டன்ஸ்சிங்கை மதித்து அதேவேகத்தில் அவளைப் பின் தொடர்ந்தான்.

இன்று என்ன நடந்தாலும் சரி அவனை எதிர் கொள்வது என்று தீர்மானித்தாள்

அவள் வேகமாக நடந்து அந்தத் தெருவின் இறுதியில் உள்ள சந்தில் திரும்பி அங்கிருந்த தெரு விளக்கின் கீழ் நின்றுகொண்டு அவன் வரக் காத்திருந்தாள்

அவனும் வேகமாக வந்து அவசரமாகத் திரும்பச் சற்றும்  எதிர்பார்க்காமல் அவள் அங்கு நின்றிருப்பதைக் கண்டு திடுக்கிட்டான்

Mr உனக்கு என்ன வேண்டும் எதற்கு என்பின் தொடர்கிறாய் என்று அவன் கண்களைப் பார்த்து நேராகக் கேட்டாள்

அவன் பேச்சு வராமல் த த ப ப என்று சொதப்பினான். சில நிமிடங்களில் சுதாரித்துக்கொண்டு டக்கென்று தன் பையிலிருந்த ஒரு காகிதத்தை எடுத்து அவளிடம் கொடுத்தான்.

அவள் அதை வாங்கி பார்க்க, அதில் ஏதோ எழுதி இருக்க அதைப் படிக்க ஆரம்பித்தாள்

டியர் சிஷ்டர்

தப்பாக நினைக்க வேண்டாம். நான் ஒரு ஊமை என்னால் பேச முடியாது ஆகையால் இந்தக் கடிதம்.

முதலில் இந்த நகரத்து மக்கள் சார்பில் உங்களுக்கும் உங்களைப் போல் சேவை புரியும் மற்ற அனைத்து செவிலியர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

பெரும்பாலோனோர் வீட்டில் இருக்க தன் நலத்தையும் பார்க்காமல் பிறர் நலத்திற்காக உழைக்கும் உங்களுக்கு என்னால் முடிந்த ஒரு சிறு காரியத்தை இந்த ஊரடங்கு உத்தரவு முடியும்வரை செய்ய நினைத்தேன்.

இந்த இடத்தைப் பற்றி எனக்கு நன்கு தெரியும் இது இரவு 8 மணிக்கு மேல் பெண்கள் நடமாடப் பாதுகாப்பற்றது. ஆகையால் உங்களுக்கு ஒரு பாதுகாப்புக்காகத் தினமும் உங்கள் வீடுவரை வரத் தீர்மானித்தேன்.

நீங்கள் இதைப் பற்றி எந்தப் பயமும் கொள்ள வேண்டாம்.உங்கள் சேவையைத் தொடருங்கள்.

நன்றி

சுமதிக்கு முதல்முறையாக எல்லாவற்றையும் மீறி ஒரு சக்தி இருப்பதை உணர்ந்தாள்.
அது கடவுளா அல்லது இயற்கையா என்ன சொல்வதென்று அவளுக்குத் தெரியவில்லை ஆனால் அதற்கு அந்த நிமிடமே தன் மனதிலிருந்து ஒரு நன்றியைத் தெரிவித்தாள்.  

மரணமில்லா வாழ்வு

நேரியன் மிக உற்சாகமாகவும் முழு ஈடுபாட்டுடனும் தனது பேராசிரியர்
சதாசிவத்துடன் பேசிக்கொண்டிருந்தான். அவரைச் சுமார் 15 வருடங்களுக்குப் பிறகு பார்த்ததில் அவனுக்கு நிறையவே சந்தோஷம்.

ஏதோ அலுவல் காரணமாகச் சென்னை வந்த பேராசிரியர் இந்த முறை அவனைச் சந்திக்க அவன் வீட்டுக்கே வந்தது அவனுக்குப் பெருமையாக இருந்தது.

ஆசிரியரும் மாணவனும் பல விஷயங்களை நேரம் போவது கூடத் தெரியாமல் பேசிக் கொண்டிருந்தனர்.

மூன்று மணி நேரத்திற்குப் பிறகு பேராசிரியர் அவனிடம் விடைபெற்றுக் கிளம்பும் தருவாயில் நேரியனின் நான்கு வயது மகன் ஆரியன் அங்கு வர , பேராசிரியர் அவனைப் பார்த்துத் தம்பி என்ன சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறீர்கள் இந்த தாத்தாவுக்கு கொஞ்சம் குடுங்க என்று கூற ஆரியன் சற்றும் தயங்காமல் அவன் கையிலிருந்த இனிப்புப் பண்டத்திலிருந்து ஒரு மிக மிகச் சிறு துண்டைக் கிள்ளி அந்த பேராசிரியரிடம் கொடுத்தான்.

அவனுக்குக் கொடுக்க மனம் இல்லையென்றாலும் ஒரு மிகச்சிறிய துண்டை கிள்ளிக்  கொடுத்துச் சமாளித்ததைப் பார்த்து அந்தப் பேராசிரியர் மிகவும் வியந்தார்.

நீ வருங்காலத்தில் ஒரு பெரிய நானோ டெக்னாலஜிஸ்ட்டாய் வருவாய் என்று அவனை வாழ்த்தினார்.

அது என்ன நானோ டெக்னாலஜீஸ்ட் என்று அந்தப் பேராசிரியரிடம் நேரியன் வினாவினான்.

நானோ என்றால் மிக மிகச் சிறியது என்று பொருள். சிறியது என்றால் நாம் நினைத்துப் பார்க்கக்கூடிய அளவைவிட மிக மிக மிகச் சிறியது.

ஒரு நானோ மீட்டர் என்றால் ஒரு மீட்டரில் 100 கோடி பாகம். அது நம் ஒரு தலைமுடியை விட 100000 மடங்கு சிறியது.

இந்த உலகில் உள்ள அனைத்து பொருள்களும் அதாவது நீ, நான், இந்த நாற்காலி, இந்த தொலைக்காட்சி, இந்தக் கதவு என்று எல்லாமே அணுக்களால் ஆனதே.

அத்தகைய அணுக்குள் சென்று அதில் உள்ள பொருள்களை நம் இஷ்டப்படி மாற்றுவதுதான் நானோ டெக்னாலஜி.

ஒரு பொருளின் அணுக்கட்டத்தை மாற்றினால் அந்தப் பொருளின் இயற்கை தன்மையே மாறிவிடும்.உதாரணத்திற்குச் சாதாரண அடுப்புக்கரின் அணுக்கட்டம் மாறுவதால் தான் அது வைரம் ஆகிறது.

இந்த நானோ டெக்னாலஜி வரும் காலங்களில் ஒரு மாபெரும் புரட்சியை ஏற்படுத்தப் போகிறது.

இதை வைத்து மனிதன் மரணத்தை  வெல்லக்கூடிய ஒரு வாய்ப்பைப் பெறப் போகிறான்.

இதற்கான ஆய்வு உலகில் பல இடங்களில் இப்போதும கூட   நடந்துக் கொண்டிருக்கிறது.

நானோபோட்  என்னும் ஒரு குறிப்பிட்ட செயல்பாட்டைச் செய்யும் மிக மிகச் சிறிய அளவு ரோபோக்களை வடிவு அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது நம் ரத்தத்திற்குள் நீச்சலடித்து சென்று உடலுக்கு எந்த  இடத்திற்கு மருந்து தேவைப்படுகிறதோ அங்கு துல்லியமாக எடுத்துச் சென்று எந்த ஒரு பக்கவிளைவும் இல்லாமல் அந்த இடத்தின் குறைபாடுகளைக் குணமாக்க உதவும்.

மேலும் நம் உடம்பில் உள்ள சேதமடைந்த உயிரணுக்களைச் சரி செய்யவும் ,மாற்ற மற்றும் புதுப்பிக்கும் ஆற்றல் பெற்றதாக இருக்கும். இதனால் மனிதன் எப்பொழுதும் நல்ல ஆரோக்கியத்துடனும் உடல் உறுதியுடனும் வாழ முடியும் என்று விரிவாக விளக்கினார் பேராசிரியர்.

இது எல்லாம் எப்பொழுது நடைமுறைக்குச் சாத்தியமாகும் என்று நேரியன் அவரிடம் கேட்டான்.

இன்னும் 40- 50 வருடங்கள் ஆகலாம். உனக்குக் கிடைக்குமா என்று என்னால் நிச்சயம் சொல்ல முடியாது ஆனால் உன் மகன் ஆரியனுக்கு நிச்சயமாக மரணமில்லா வாழ்வு உண்டு என்று வாழ்த்தி அந்தப் பேராசிரியர் விடை பெற்றார்.  

Battle of Gaugamela

In BC 331 this battle was fought between Alexander the Great of Macedonia and Dairus-III, the last king of the Achaemenid of Persia.

Dairus had the biggest army; the world had ever seen that point of time at his disposal and still lost the battle. According to some ancient sources, the estimates of armies’ sizes were one million at Dairus side and mere fifty thousand that of Alexander.  At the end of the battle, Persians lost around four hundred thousand of its men while Alexander lost less than one thousand hundred people and emerged victorious.

With less how Alexander achieved more?

Alexander knew his army was clearly outnumbered, unless and otherwise he thinks and acts differently he could not succeed. He devised a brilliant strategy, explained it to his front-line commanders and ensured they all understood it well. The essence of it was to break the Persian line of defense and kill Darius as soon as possible so that the Persian army will lack direction, lose their morale and give up.

Then, he got into action, at the battlefield he lined up his army in a different and never seen before formation in front of the Dairus Army. His army was divided into two. Right side was commanded by him and the left side by his chief Parmenion. The entire formation was at an angle inclined to the right of the Center to that of Dairus formation.

In the opposite side Darius and his army were just facing the Macedonians with straight-line formation. Darius placed himself at the center with best of his cavalry and infantry protecting him.

The battle began and the Macedonian army started moving sideways. This unusual movement of sideways instead of moving front caused confusion in Darius mind, and he ordered his army to move sideways as well as to the front, to counter the Macedonians.  

As the soldiers started to move, Darius ordered his chariots in the front line to attack the Macedonians and within no time Alexander’s men countered it effectively with their shower of Javelins. It shook and broke the confidence of the charioteers. While this was happening, Alexander kept moving his army sideways (rightward march) and Darius ordered his men to stay parallel to Macedonians. This led to a sudden opening of the front-line in the Persian formation giving Alexander direct access to Darius.

Alexander took immediate advantage of that moment and with his companion cavalry started approaching Darius, who had only few small contingents of troops around him at that time. All his other troops were either busy marching sideways or ahead as per his earlier instruction.

Alexander knew that was his moment and ordered his men to crush that weak line of defense in front of his target – King Dairus. They killed the charioteer of Dairus. It shattered Dairus’s confidence; he jumped out of his chariot and fled the battle field to save himself. Soon this news spread among the Persian army. As expected, it disheartened them, and they surrendered to the Macedonians.

As we reflect on the Battle of Gaugamela, there are many things to learn.

Key things I learned

1.     Have a Strategy/Plan before action.

2.     Importance of Aligning the team to the Strategy/Plan.

3.     Importance of Communication at Crucial times.

4.     More with less is possible.

5.     Surprise your Competitor – Do the unexpected.

6.     Begin with the end in mind.

7.     Be different.