
அந்தக் குரு அவர் வேலையை அங்குச் சிறப்பாகச் செய்து முடித்தார். தன் சீடர்களிடம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு அவர் இமயமலைக்குச் செல்ல முடிவெடுத்தார்.
தன் சீடர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து பொறுப்புக்கள் அனைத்தையும் ஒப்படைத்தார். மறுநாள் காலை அவர் இமயமலைக்குக் கிளம்பத் தயாரானார்.
தான் அவரது வாரிசாகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதை அறிந்து பொறாமை கொண்ட ஒரு சீடன் அன்றிரவு அவருடைய உணவில் விஷத்தைக் கலந்து விட்டான்.
உயிர்நீத்த அந்தக் குருவை மறுநாள் அந்தக் கோவிலிலே புதைத்துவிட்டனர் அவருடைய சீடர்கள்..
சில ஆண்டுகளுக்குப் பிறகு அந்த ஊரைச் சார்ந்த ஒரு முக்கிய நபர் அந்தக் குருவைத் தான் இமயமலைக்குச் செல்லும் வழியில் கண்டதாகவும் அவரிடம் இருந்த ஒரு கைத்தடியில் ஒத்த செருப்பு தொங்கிக்கொண்டு இருந்ததைப் பார்த்து அதன் அர்த்தம் என்னவென்று என்று கேட்டதாகவும் அதற்கு அந்தக் குரு உனக்கு விரைவில் புரியும் என்னக்கூறி தன் பயணத்தைத் தொடர்ந்ததாகவும் அந்தச் சீடர்களிடம் சொன்னார்.
அந்த முக்கியமான நபர் மிகவும் நம்பிக்கைக்கு உரியவர் அதனால் அவர் கூறியதைக் கேட்டு அந்தச் சீடர்கள் குழப்பம் அடைந்தனர் .
விரைவாகச் சென்று அந்தக் குருவைப் புதைத்த இடத்தைத் தோண்டினார்கள். அந்த இடத்தில் ஒரு செருப்பு மட்டுமே இருந்தது.
அனைவருக்கும் அந்த ஒத்த செருப்பின் அர்த்தம் அப்போது விளங்கியது. அந்தக் குரு அவரின் ஒரு செருப்பை மட்டும் அந்தச் சமாதியிலேயே விட்டு விட்டு மற்றொரு செருப்புடன் இமய மலையை நோக்கிச் சென்றுவிட்டார்.
அவ்வாறு உயிர்த்தெழுந்த மகான் வேறுயாருமல்ல நம் பல்லவ சாம்ராஜ்யத்தின் இளவரசராக இருந்து அனைத்தையும் துறந்து சீனாவுக்குச் சென்று ஜென் புத்திசத்தைத் தோற்றுவித்து, ஷாலின் தற்காப்புக் கலையை அவர்களுக்குக் கற்றுக்கொடுத்த போதி தர்மர்.