பாரதி @ புதிய பூமி

1 ஜனவரி 2250
புதிய பூமி

சரியாக ஒரு வருடம் கழித்து பா -1112 என்னும் ஒரு மாத்திரையை அவன் மீண்டும் விழுங்கினான். இனி இன்னும் ஒரு வருடத்திற்கு அவன் கவலைப்பட வேண்டியதில்லை.

அவன் வாழ்வில் இன்று மிக முக்கியமான நாள்.தன் குழுவுடன் சேர்ந்து அந்த திட்டத்தின் அன்றைய வேலையை தொடங்கினான்.

கடந்த காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் பயணிக்கக்கூடிய நேர இயந்திரமான தனது ஆர்பிகாரின் இறுதி  சோதனைகளை மேற்கொண்டான்.
அந்தத் திட்டத்தின் குறிக்கோள்களும் நோக்கங்களும் தெளிவாக இருந்தன இன்னும் சற்று நேரத்தில் அந்த ஆர்பிகார் அந்த இடத்தை விட்டு நகர போகிறது.
சுமார் 329 வருடங்கள் பின் சென்று தன் இலக்கை அடைந்து அது தனக்கு இட்ட கட்டளையை நிறைவேற்றி திரும்பிவரப் போகிறது.

அந்த ஆர்பிகாரின் செயல் திறன்களை கடைசியாக ஒரு முறை கூர்ந்து கவனித்து விட்டு அது கிளம்புவதற்கான கட்டளை இட்டான். ஜூம் என்று கண் இமைக்கும் நொடியில் அது மறைந்தது.அதன் இலக்கு காலம் பின்சென்று 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி பூமியில் ஒரு குறிப்பிட்ட நபரை அடையாளம் கண்டு அவரை புதிய பூமிக்கு அழைத்து வருவது.

சரியாக 54: 34: 23: 01 வினாடிகளுக்குப் பிறகு, ஆர்பிகார் ஒரு நபருடன் அந்தப் புதிய பூமியில் தரையிறங்கியது.

ஆர்பிகாரின் கதவுகள் திறக்கப்பட்டு ஒரு நபர் வெளியேறினார். அவர் மிகுந்த தன்னம்பிக்கையுடனும், பயம் ஒரு துளியும் இல்லாமல் காணப்பட்டார்.

விஞ்ஞானிகளைப் பார்த்து, “என் பெயர் பாரதியார், மக்கள் என்னை பாரதி என்று அழைப்பார்கள்” என்றார்.

“ நான் இப்போது எங்கே இருக்கிறேன்? இந்த இடம் யாது ” என்று வினாவினார்.

அங்குள்ள விஞ்ஞானி ஒருவர் பதிலளித்தார் “நாங்கள் உங்களை அறிவோம், இந்த இடம் பாதுகாப்பானது, இது  புதிய பூமி என்று அழைக்கப்படுகிறது.

பழைய பூமியில் உங்கள் வாழ்நாளில் தாங்கள் ஆழ்ந்து உணர்வுப்பூர்வமாக ஏற்றிய ஒரு கவிதையிலிருந்து பெற்ற உத்வேகத்தினால் நாங்கள் இங்கு  உருவாக்கிய  ஒன்னற  காண்பிப்பதற்காக உங்களை இங்கு அழைத்து வந்திருக்கிறோம்” என்று முடித்தார்

பின்னர், மாத்திரை பா-1112 பாரதிக்கு காண்பிக்கப்பட்டது. (அவர் பெயரில் ஒரு மாத்திரை பாரதிக்கு பா -மற்றும் 11/12 அவர் பிறந்த நாள் மற்றும் மாதத்தின் எண்கள்.)

மேலும், அந்த விஞ்ஞானி பெருமையுடன் கூறினார், “பா-1112  ஒரு மாத்திரையை விழுங்கினால் ஒருவருக்கு பசியின் அறிகுறி முற்றிலும் இருக்காது மற்றும் அவருக்கு ஒரு வருடத்திற்கு தேவையான சக்தி அனைத்தும் கிட்டும்.

இந்த புதிய பூமியின் மொத்த மக்கள்தொகைக்கு தேவையானதை விட இந்த மாத்திரைகள் எங்களிடம் நிறையவே உள்ளது.

தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழிப்போம் என்று தாங்கள் கூறியிருந்தீர்கள்

உங்கள் விருப்பப்படி நாங்கள் பசியில்லா ஒரு உலகத்தை படைத்து விட்டோம்.”

பாரதி மிகவும் உற்சாகம் அடைந்தார் மகிழ்ச்சி அடைந்தார்.அங்குள்ள  அனைவருக்கும் இருகரம் கூப்பி நன்றி கூறினார்.பிறகு ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினார் சிறிது நேரம் கழித்து  விஞ்ஞானிகளைப் பார்த்து அவர் பேசினார்.

நீங்களெல்லாம் பசிக்கு ஒரு முடிவு கட்டியது போல் கடவுள் என்ற ஒன்றுக்கும் தீர்வு காணவேண்டும்.அதுவே அடுத்த சிறந்த காரியமாக இருக்கும்.
கடவுள் பிரச்சினை உணவு பிரச்சனைக்கு முரணானது. எங்கள் பூமியில் அளவுக்கதிகமாக கடவுள் இருக்கிறார்கள் அதனால் பல பிரச்சனைகள்.

நீங்கள் எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய  ஒரு கடவுளை கண்டுபிடிப்பீர்கள் ஆனால்  அது மிகச்சிறந்த பலனை அளிக்கும் .
அதற்குத் தேவையான முயற்சிகளை தயவுகூர்ந்து மேற்கொள்ளுங்கள்.

விஞ்ஞானிகள் உடனே அதைப் பற்றி சிந்திக்கத் தொடங்கினர்.

ஆர்பிகார் மீண்டும் பயணிக்கும், ஆனால் கடந்த காலத்திற்கா அல்லது இதுவரை அறியப்படாத எதிர்காலத்திற்கு என்பதை காலம்தான் முடிவு செய்யும்.

முடிவு.

பிகு:  பாரதி ஒரு சிறந்த தமிழ் கவிஞர் (டிசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s