
ஒரு ஆறு
அதன் இக்கரை ஆழம் நான்கு அடி
நடுவிலோ ஆழம் பத்து அடி
அக்கரை ஆழம் இரண்டு அடி
ஒரு நீந்தத் தெரியாத மனிதன் அவன் உயரம் ஆறடி
ஆற்றின் சராசரி ஆழம் தன்னைவிட
குறைவு எனக் கூறி வைத்தான் ஆற்றின் நடுவில் ஒரு அடி
முடிந்தது அவன் கதி
ஒருவன் நன்மை ஆயிரம் செய்ய
நடுவே தெரிந்தே தீயதும் நூறு செய்ய
நன்மையே அதிகம் என சராசரி கணக்கு கூற
அவன் வாழ்க்கை பயணம் தொடர
என்னவாகும் அவன் கதி?
அது நடக்கும் அவன் விதிபடி என்றார் ஒருவர்
நன்மையும் தீமையும் ஒன்றே என்றார் இன்னொருவர்
நீயே அதை செய்து பார் அது தெரியும் நன்கு புரியும் என்றார் மற்றொருவர்
ஒன்று புரிந்தது எனக்கு வாழ்வில் நீந்தக் கற்றுக்கொள்ள வேண்டும்
அதுவே சிறந்த மதி