
கடவுள் யாது என்று நான் கேட்க
கட உன்னுள் அது தெரியும் என அவர் கூற
நான் கடக்க
என்னுள் நடக்க
அதுவே இது
இதுவே அது
வேறொன்று எது?
நீயே நான்
நானே நீ
என புரிய,அதை நான் அறிய
என்னுள் உன்னை தேடி
உன்னுள் என்னை கண்டேன்
கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்! என்பதை பொய்த்து
உன் முன் நான் நின்று
உன்னுள் என்னைக் கண்டு
இப்போ தினம் தினம் மகிழ்வதுண்டு