
மேலிருந்து நீ பார்க்க
கீழே இவ்வுலகில் பலர் வந்து போக
வரும் வழி பிறப்பு
போகும் வழியோ இறப்பு
நடுவே அவரவர் வாழ்வுதன்னில் உன்னைக் காண்பது மிகச்சிறப்பு
சில சமயம் தேய்ந்து,
சில சமயம் வளர்ந்து ‘
சில சமயம் முழ நிலவாய்
நீ வந்து
எற்ற தாழ்வு தான் வாழ்வின் சாரம் எனப் பாடம் தந்து
அதைக் கொண்டு உன்னைப் போல் பிராகசித்தோர் இவ்வுலகில் பலர் உண்டு